Wednesday, February 26, 2025

வைராக்கியம் அப்யாசம் ஆசைகள் கடமைகள்

வைராக்கியம்:

மனம் எப்பொழுதும் வெளி நோக்கியே செல்லும். வெளியில் உள்ள பொருட்களில் இன்பம் இல்லை என்று காலப்போக்கில் நாம் உணருகிறோம், இதை "வைராக்கியம்" என்பர். மண், பொன், பெண், பொருள், புகழ் எல்லாம் சிறிது காலத்திற்கே இன்பம் தருவன. இவை நிலையிலான இன்பம் தருவனவல்ல, சிறிது காலத்திற்குப் பின் துன்பத்தையே தருவன என்பதை உணர உணர நம் வைராக்கியம் வளர்கிறது.


அப்யாசம்:

மனம் வெளி நோக்கி செல்லாமல் உள்ளேயே நிலை நிறுத்துவது "அப்யாசம்" என்பர் அல்லது "அப்யாச பலம்" என்பர். மனம் வெளி விஷயங்களில் செல்லாமல் உள்ளே "நான் யார்?" "நான் இருக்கிறேன்" "நான்" "நான்" "நான்" என்கிற மூல நாட்டத்தில் நிற்கும்பொழுது, "நான்" என்கிற தன்னுணர்வில் நிற்கும்பொழுது, எண்ணங்கள் அற்ற நிலை ஏற்படுகிறது. அந்த எண்ணங்கள் அற்ற நிலையை மனம் அற்ற நிலை என்கின்றனர் அல்லது மனோ நாசம் என்கின்றனர். அப்யாச பலம் பெருகப் பெருக, "நான்" என்கிற தன்னுணர்வில் நீண்ட நேரம் நிற்க முடியும். ஐந்து நிமிடம், நாற்பது நிமிடம், நான்கு மணி நேரம் என்று பெருகும். உண்மையில் மனம் அற்ற நிலையில் நேரம் என்று ஒன்று இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது. கால தேசம் அற்ற நிலை. (Coming out of the dimensions of time and space)


மேலே கூறப்பட்டது அவ்வளவு எளிதாக கைகூடுமா ?


ஆசைகள், கடமைகள்:

ஆசைகள் இருக்கும் வரை கடமைகளும் இருக்கும். ஆசைகள் கடமைகள் இருக்கும் வரை இறை நாட்டம் ஏற்படாது. ஆசைகளை அளவில்லாமல் வளர்த்துக்கொண்டு துன்பப்படாமல் இருக்கவேண்டுமானால், தேவை அற்ற ஆசைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். 


1 comment:

Understanding Marriage

This write up is for people who are above the age of 18. When I got married I did not realize what I was getting into. There was no one to t...