*இதுவும் கடந்து போகும்*
விளையாட்டில் சிலகாலம்
படிப்பில் சிலகாலம்
பணம் தேடி சிலகாலம்
மணம் தேடி சிலகாலம்
பொருள் தேடி சிலகாலம்
அருள் தேடி சிலகாலம்
மண்ணாசையில் சிலகாலம்
பொண்ணாசையில் சிலகாலம்
பெண்ணாசையில் சிலகாலம்
புகழாசையில் சிலகாலம்
அறிவோடு சிலகாலம்
அறியாமையில் சிலகாலம்
உறவோடு சிலகாலம்
பிரிவோடு சிலகாலம்
விழிப்போடு சிலகாலம்
கனவோடு சிலகாலம்
தூக்கத்தோடு சிலகாலம்
யோகத்தில் சிலகாலம்
ரோகத்தில் சிலகாலம்
மோகத்தில் சிலகாலம்
போகத்தில் சிலகாலம்
இன்பத்தில் சிலகாலம்
துன்பத்தில் சிலகாலம்
இசையோடு சிலகாலம்
வசையொடு சிலகாலம்
எனக்காக சிலகாலம்
ஊருக்காக சிலகாலம்
ஆலயத்தில் சிலகாலம்
அல்பமாய் சிலகாலம்
உயிரோடு சிலகாலம்
இறப்போடு சிலகாலம்
இதுவும் கடந்து போகும்
எஞ்சி நிற்பது இன்னும் சிலகாலம்
No comments:
Post a Comment