Saturday, January 11, 2025

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி

 ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி

       ஆளினுங் கடல்மீதிலே

    ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக

       அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

        நெடுநா ளிருந்தபேரும் 

     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி

   

    நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்

யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்

       உறங்குவது மாகமுடியும்

   உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே

      ஒன்றைவிட் டொன்றுபற்றிப்

பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற

       பரிசுத்த நிலையை அருள்வாய்

    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற

       பரிபூர ணானந்தமே. 

                     - தாயுமானவர் ( பரிபூரணானந்தம். பாடல் எண் 10)



My version after reading the above Thayumanavar's song


ஆசைக்கோர் அளவில்லை !

அகிலமெல்லாம் கட்டி ஆண்டாலும்,

அலை கடல் மேல் ஆட்சி புரிந்தாலும்,

பொன்மணி வைரங்கள் குவிந்தாலும்,

புகழ் மலை உச்சியில் அமர்ந்தாலும்,

ஆசைக்கோர் அளவில்லை

என் மனமே, 

உன் ஆசைக்கோர் அளவில்லை !

No comments:

Post a Comment

Understanding Marriage

This write up is for people who are above the age of 18. When I got married I did not realize what I was getting into. There was no one to t...